

கம்பத்தில் லாரியில் கடத்திவரப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து, விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் கம்பம்மெட்டு சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில், 12 மூட்டைகளில் மொத்தம் 100 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் கம்பம் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மஸ்தான் மகன் ஷாஜகான் (45), சேலத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து, கம்பம் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஷாஜகானை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலை மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனா். புகையிலைப் பொருள்கள்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.