18 ஆம் கால்வாய் மதகு அடைக்கப்பட்டது

18 ஆம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரை பொதுப்பணித்துறையினர் நிறுத்தினர்.
18 ஆம் கால்வாய் மதகு அடைக்கப்பட்டது

18 ஆம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரை பொதுப்பணித்துறையினர் நிறுத்தினர்.

டிச. 19 இல் உத்தமபாளையம் மற்றும் போடி வட்டங்களில் உள்ள மானாவாரி நிலங்கள் பாசனம் பெறும் அளவில் 18 ஆம் கால்வாய் தண்ணீரை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.  திறக்கும் போது விவசாயிகள், கால்வாய் தூர்வாரப்படாமல் திறக்கின்றனர், இதனால் கரை உடையும் வாய்ப்பு அதிகம் என்றனர்.

பொதுப்பணித்துறையின் மஞ்சளாறு வடி நில கோட்டத்தினர் அதை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் சனிக்கிழமை மதியம் 18 ஆம் கால்வாய் தொடங்கும் பகுதியான லோயர் கேம்ப் ஜீரோ பாய்ண்ட் பகுதியிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் தொட்டிப்பாலம் அருகே வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் பாசனத்திற்கு தேவைப்படும் டி.சிந்தலைச்சேரி விவசாயிகள் சொந்தமாக பணியாளர்களை கொண்டு உடைந்த கரையை மணல் மூட்டைகள் போட்டு அடைத்தனர். 

ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதையும் உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறியது. இதுபற்றி விவசாயிகள் மஞ்சளாறு கோட்டத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் கால்வாய் தண்ணீரை அடைத்தனர். இதுபற்றி பொறியாளர் ஒருவரை கேட்டபோது உடைந்த கரை 2 நாளில் சரிசெய்யப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com