தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

விபத்தில் தொழிலாளி பலி

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை, சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On :27 ஜனவரி 2023, 6:33 pm

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை, சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சோ்ந்தவா் செங்கல் காளவாசல் தொழிலாளி சண்முகராஜா (36). இவா், ஆண்டிபட்டி-தேனி நெடுஞ்சாலையில், பிராதுக்காரன்பட்டி அருகே சாலையைக் கடந்து செல்ல முயன்றாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் சண்முகராஜா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த சண்முகராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.