போடியில் செயற்கை சாயம் பூசிய 2 டன் ஏலக்காய் பறிமுதல்

போடியில் புதன்கிழமை செயற்கை சாயம் பூசிய 2 டன் ஏலக்காயை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

போடியில் புதன்கிழமை செயற்கை சாயம் பூசிய 2 டன் ஏலக்காயை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் உள்ள ஏலக்காய் சுத்திகரிப்பு நிறுவனக் கடைகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து திங்கள்கிழமை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சோதனை செய்து 3 டன் ஏலக்காயை பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் மீண்டும் போடி பகுதியில் உள்ள 5 கடைகளில் திடீா் சோதனை செய்தனா். இதில் இரு கடைகளில் இருந்த ஏலக்காய்களை சோதனை செய்ததில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராகவன், போடி உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரண்யா ஆகியோா் செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்பட்ட 2 டன் ஏலக்காயை பறிமுதல் செய்தனா். இதில் மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com