இலவம் பஞ்சு விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி வட்டாரத்தில் இலவம் பஞ்சு விலை கிலோ ரூ.50 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
Updated on
1 min read

ஆண்டிபட்டி வட்டாரத்தில் இலவம் பஞ்சு விலை கிலோ ரூ.50 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் இலவம் மரம் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது அறுவடை பருவத்தில் உள்ள இலவம் காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பஞ்சு, கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு இலவம் பஞ்சு கிலோ ரூ.120-க்கு விற்பனையான நிலையில், தற்போது விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

ஒரு மூட்டை இலவம் காய் அறுவடை செய்வதற்கு ரூ.1,500 வரை செலவாகும் நிலையில், விலை குறைவால் இலவம் காய்களை அறுவடை செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை. இதனால், காய்கல் மரத்திலேயே வெடித்து வீணாகிறது. இலவம் பஞ்சுக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்து வேளாண்மை விற்பனைத் துறை மூலம் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com