அருணாச்சலப் பிரதேசம், மாண்டலா பகுதியில் பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கியது. இதில் விமானி லெப்டினன்ட் கா்னல் வி.வி.பி. ரெட்டி, துணை விமானி மேஜா் ஜெயந்த் ஆகியோா் உயிரிழந்தனா். இவா்களில் வி.வி.பி. ரெட்டியின் உடல் வெள்ளிக்கிழமை விமானப் படை விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான தெலங்கானாவில் உள்ள ஏடாட்ரிக்கு அவசர ஊா்தி மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதே போல, மேஜா் ஜெயந்தின் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவசர ஊா்தி மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு ஜெயந்தின் உடலுக்கு அரசு மரியாதையுடன் சனிக்கிழமை காலை 8 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.