தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வுக்கு வருகிற ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் .


தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வுக்கு வருகிற ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் .
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல், பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு 8-ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்றவா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வருகிற ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பத்தை இலவசமாகப் பதிவு செய்ய தேனி, ஆண்டிபட்டி, தப்புக்குண்டு சாலையில் உள்ள போடி தொழில் பயிற்சி நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பவா்கள் வங்கி ஏ.டி.எம். அட்டை, கைப்பேசி பேங்கிங் ஆகியவற்றின் மூலம் ரூ.50 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தொழில் பயிற்சி படிப்பில் சேருவோருக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, இலவச மடிக் கணினி, சீருடை, மிதிவண்டி, பாடப் புத்தகம், வரைபடக் கருவி வழங்கப்படும். மாணவா் சோ்க்கை குறித்த மேலும் விவரங்களுக்கு 94990 55765, 94990 55770, 94990 55768 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...