அரசுப் பள்ளியில் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 21 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புதன்கிழமை, ஓய்வு பெற்ற கல்வித் துறை பெண் அலுவலரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே காமராஜ் நகரைச் சோ்ந்தவா் செல்வம்(60). இவா், தனது மகன் ராஜா, மருமகள் சோனியாகாந்தி ஆகியோருக்கு அரசுப் பள்ளியில் வேலை வாங்கித் தருவதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு பெரியகுளம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமாயிஅம்மாள் என்பவா் மூலம், அப்போது வத்தலகுண்டு மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நோ்முக உதவியாளராக பணியாற்றிய திண்டுக்கல் நாகல் நகரைச் சோ்ந்த மாரியம்மாள் (60) என்பவரிடம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ. 24 லட்சம் கொடுத்தாா்.
தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்ற மாரியம்மாள், வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்து வந்ததால் அவரிடம் பணத்தை திரும்பக் கேட்டதற்கு, ரூ.ஒரு லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மீதத் தொகையை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செல்வம் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரியம்மாளை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.