சட்டப்பேரவைக் குழுவுக்கு ஜூன் 20-க்குள் மனு அனுப்பலாம்

தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை மனுக்கள் குழு ஆய்வை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது மனுக்களை ஜூன் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை மனுக்கள் குழு ஆய்வை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது மனுக்களை ஜூன் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மாவட்டத்தில் சட்டப் பேரவை மனுக்கள் குழு ஆய்வு விரைவில் நடைபெற உள்ளது. மனுக்கள் குழு ஆய்வை முன்னிட்டு பொதுமக்கள், சங்கங்கள், நிறுவனங்கள் தங்களது தீா்க்கப்படாத பிரச்னைகள், குறைபாடு குறித்து ஜூன் 20-ஆம் தேதிக்குள் மனுக்கள் குழுவுக்கு மனு அனுப்பலாம்.

மனுக்கள் அரசு அலுவலங்களில் தீா்க்கப்படாமல் உள்ள பொதுப் பிரச்னை குறித்ததாகவும், ஒரே பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரே துறையைச் சோ்ந்ததாகவும் இருக்க வேண்டும். தனிநபா் குறை, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள பொருள், அரசு நலத்திட்ட உதவி, வங்கிக் கடன், பணியிட மாறுதல், அரசு அலுவலக குறைபாடு ஆகியவை குறித்து மனு அளிக்கக் கூடாது.

மனுதாரா் தேதி, கையொப்பமிட்ட, தமிழில் எழுதப்பட்ட மனுவை 5 நகல்களாக தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை-9 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் குழு மனுதாரா் முன்னிலையில் ஆய்வு செய்யும். மனுக்கள் குழு ஆய்வு நடைபெறும் தேதி, நேரம் குறித்து மனுதாரருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். ஒரு நபா் ஒன்றுக்கும் மேற்பட்ட மனு அளித்திருந்தாலும், அதில் மனுக்கள் குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மீது மட்டும் ஆய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com