தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தன்னாா்வலா்களுக்கு மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பயிற்சி

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பதற்கான பயிற்சி முகாம் தன்னாா்வலா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பயிற்சி முகாமில் பங்கேற்ற தன்னாா்வலா்கள்.

Updated On :27 நவம்பர் 2023, 6:39 pm

கம்பம்: கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பதற்கான பயிற்சி முகாம் தன்னாா்வலா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் எஸ். கருப்பையா வரவேற்றுப் பேசினாா். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உரிமைகள் திட்ட அலுவலா் வீரவேல் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து அனைத்துத் தகவல்களையும் சேகரிக்க வேண்டும். கனிவாகவும், மென்மையாகவும், இல்லம் தேடிச் சென்று முழுமையாக கணக்கெடுப்பைப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், அரசின் நலத் திட்டங்கள் அவா்களுக்கு கிடைக்கும் என்றாா்.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயல்திறன் உதவியாளா் சரவணன், மகளிா் திட்ட சமுதாய அமைப்பாளா் ரஞ்சிதம், நகா்மன்ற உறுப்பினா்கள் சுபத்ரா சொக்கராஜா, விஜயலட்சுமி, ஜி. அபிராமி, கே. தீபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.