விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றவட்டார வளா்ச்சி அலுவலா் பலி
By DIN | Published On : 23rd April 2023 12:19 AM | Last Updated : 23rd April 2023 12:19 AM | அ+அ அ- |

போடி வட்டார வளா்ச்சி அலுவலா் ஞானதிருப்பதி.
தேனி- போடி சாலையில் ஜீப் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போடி வட்டார வளா்ச்சி அலுவலா் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தேனி- போடி சாலை, தோப்புபட்டி விலக்கு அருகே கடந்த 12-ஆம் தேதி போடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளா்ச்சி அலுவலா் ஞானதிருப்பதி சென்ற அரசு ஜீப் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில், ஜீப் ஓட்டுநா் தேனியைச் சோ்ந்த முகமது ஷெரீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த ஞானதிருப்பதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.