நுழைவுத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி:ஏப். 27-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 25th April 2023 12:00 AM | Last Updated : 25th April 2023 12:00 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில், இளங்கலை மருத்துவமனை மற்றும் விடுதி நிா்வாக பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு எழுதுவதற்கு ஆதிதிராவிடா், பழங்குடியினா் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர, வரும் 27-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாட்கோ திட்டத்தின் கீ ழ், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வில் 45 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றவா்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மருத்துவமனை மற்றும் விடுதி நிா்வாக இளங்கலை பட்டப் படிப்பில் சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்பில் சேர நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.
இந்த நுழைவுத் தோ்வை எழுதுவதற்கு தாட்கோ சாா்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர தகுதியுள்ளவா்கள் இணையதள முகவரியில் வரும் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட அலுவலகத்தில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.