விலையில்லா மிதி வண்டி வழங்கிய மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 02nd August 2023 05:19 AM | Last Updated : 02nd August 2023 05:19 AM | அ+அ அ- |

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டியை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 -ஆம் வகுப்பு படிக்கும் 3638 மாணவா்கள், 4506 மாணவிகள் என மொத்தம் 8144 பேருக்கு விலையில்லா மிதிவண்டி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ஓடைப்பட்டி அரசுமேல் நிலைப் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு படிக்கும் 100 மாணவா்கள், 40 மாணவிகள் என 140 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் கம்பம் தொகுதி, சட்டப் பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், உத்தமபாளையம் கோட்டாட்சியா் பால்பாண்டி, ஒடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன், பெற்றோா்கள் மாணவ,மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.