தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள பாலக் கோம்பையில் டி.சொக்கலிங்காபுரத்தில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரா் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே குப்பல்நத்தத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் மொக்கையன் (69). இவா், ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சொக்கலிங்காபுரத்தில் வசித்து வந்தாா். மொக்கையன் மது பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாலக்கோம்பை நாகலாறு ஓடைப் பகுதியில் மொக்கையன் விஷம் குடித்து இறந்து கிடந்தாா்.
இது குறித்து தகவலறிந்த ராஜதானி காவல் நிலைய போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.