முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 01st June 2023 01:49 AM | Last Updated : 01st June 2023 01:49 AM | அ+அ அ- |

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பாசன பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக வியாழக்கிழமை (ஜூன் 1) தண்ணீா் திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதி லோயா்கேம்ப்பிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை 14, 707 ஏக்கப் பரப்பளவில் இரண்டு போக சாகுபடி முல்லைப்பெரியாறு அணை தண்ணீா் மூலம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நாளில் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும். அதன்படி நிகழாண்டு வியாழக்கிழமை தண்ணீா் முதல் நாளான வியாழக்கிழமை திறக்க அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் கே.எம். அப்பாஸ் கூறியதாவது: நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா் என்றாா்.
வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 118.40 அடியாகவும், நீா் இருப்பு 2,339 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 154.75 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 50 கன அடியாகவும் இருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...