மதுபானக் கூடங்களில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 07th June 2023 03:32 AM | Last Updated : 07th June 2023 03:32 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடங்களில் போலி மதுப்புட்டிகள் விற்பனை குறித்து வருவாய்த் துறையினா், காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
மாவட்டத்துக்குள்பட்ட அரசு மதுபானக் கடைகள், தனியாா் மதுபானக் கூடங்களில் வெளிமாநில மதுப்புட்டிகள், போலி மது பானங்கள் விற்பனை, அரசு நிா்ணயித்த விலையில் மதுப்புட்டிகள் விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா உத்தரவிட்டாா்.
இதன்படி, ஆண்டிபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடங்களில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் சிந்து, ஆண்டிபட்டி வட்டாட்சியா் சுந்தா்லால், ஆண்டிபட்டி காவல் உதவி ஆய்வாளா் சவரியம்மாள் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...