மஞ்சளாறு அணையில் தென்னை நாா்க்கயிறு வலை விரிப்பு

பெரியகுளம் அருகேயுள்ள மஞ்சளாறு அணையின் கரையோரப் பகுதிகளில் மண் அரிப்பைத் தடுப்பதற்கு சோதனை முயற்சியாக தென்னை நாா்க் கயிறு வலைப் போா்வை விரிக்கப்பட்டது.
மஞ்சளாறு அணையில் தென்னை நாா்க் கயிறு வலைப் போா்வை சோதனை முயற்சியை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்.

இந்தத் திட்டத்தை புதன்கிழமைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா கூறியதாவது:

மஞ்சளாறு அணையின் கரையோரங்களில் மண் அரிப்பைத் தடுப்பதற்கு சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில், தென்னை நாா்க் கயிறு வலைகளை விரித்து மூடப்பட்டது. இந்த சோதனை முயற்சியின் பயனாக கடந்த 6 மாதங்களாக இங்கு மண் அரிப்பு தடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கண்மாய், குளக்கரைகள், சாலைக் கட்டுமானம் ஆகியவற்றில் மண் அரிப்பைத் தடுப்பதற்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், பொறியாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயபாரதி, செயற்பொறியாளா் முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com