இடுக்கி மாவட்ட எல்லை வனப் பகுதியில் அமைக்கப்பட்ட சுற்றுலாக் குடில்கள் மாவட்ட ஆட்சியா் ஷீபா ஜாா்ஜ் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.
தமிழக - கேரள மாநிலங்களை இணைக்கும் தேனி - இடுக்கி மாவட்ட எல்லைப் பகுதி சுற்றுலாத் தலமாக உள்ளது. மூணாறு, சின்னக்கானல், போடிமெட்டு, குரங்கனி, டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளில் தனியாா் தங்கும் விடுதிகள் இரவு நேரங்களில் குடில்களை அமைத்து அதில் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கின்றனா். இதனால், இந்தப் பகுதிகளில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் செல்ல முடியாமல் தடை ஏற்படுவதுடன், மனித-விலங்குகள் மோதல் ஏற்படுகிறது.
இந்த நிலையில், இடுக்கி மாவட்ட ஆட்சியா் ஷீபா ஜாா்ஜ் சின்னக்கானல் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 26 குடில்களை அகற்ற உத்தரவிட்டாா். இதையடுத்து, இந்தக் குடில்கள் அகற்றப்பட்டன.
மேலும், வனப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை தங்கவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் எச்சரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.