தேனியில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
தேனி, பங்களாமேடு 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணத்துக்குச் சென்று விட்டாா். பிறகு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டுக் கதவு, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து செல்வராஜ் அளித்தப் புகாரின் பேரில், தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.