ஏடிஎம்-இல் கள்ள நோட்டுகளை செலுத்தியவா் மீது வழக்கு

போடி அருகே கள்ள நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்திய டைல்ஸ் விற்பனை நிறுவன உரிமையாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே கள்ள நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்திய டைல்ஸ் விற்பனை நிறுவன உரிமையாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கிருஷ்ணா நகா் பகுதியில் தனியாா் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி முன்பாக வைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில், கடந்த மாதம் 24-ஆம் தேதி ஒரு நபா், 8 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்திவிட்டுச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து வங்கி நிா்வாகத்தினா் கண்காணிப்புக் கேமரா மூலம் ஆய்வு செய்ததில், இப்பகுதியில் டைல்ஸ் விற்பனை நிறுவனம் நடத்தி வரும் கோகுல் என்பவா் கள்ள நோட்டுகளை செலுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து வங்கியின் மேலாளா் காா்த்திக் (43) போடி தாலுகா காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில், கோகுல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com