ராஜீவ்காந்தி நினைவு தினம்
By DIN | Published On : 22nd May 2023 06:30 AM | Last Updated : 22nd May 2023 06:30 AM | அ+அ அ- |

போடியில் ஞாயிற்றுக்கிழமை ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினா் அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
போடி தேவா் சிலை திடலில் ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நகா்த் தலைவா் முசாக் மந்திரி தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா். இதில் தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதையடுத்து, வருகிற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கொண்டுவருவது என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேனி மாவட்டத் துணைத் தலைவா் சன்னாசி, வட்டாரத் தலைவா் சுதாகா், நகரச் செயலா்கள் ரவிச்சந்திரன், காந்தி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.