தேனி மாவட்டத்தில் சிறுபான்மையினா் கூட்டுறவுச் சங்கங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்க வரும் 25-ஆம் தேதி 7 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் தனி நபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைஞா்கள் தொழில் கடன், கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் கீழ் சிறுபான்மையினா் கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்புறங்களைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.1.20 லட்சத்துக்கும், கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.95 ஆயிரத்துக்கும் உள்பட்டு இருக்க வேண்டும்.
கடனுதவி பெற விண்ணப்பிக்க வரும் 25- ஆம் தேதி காலை 10 மணிக்கு தேனி, போடி, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, ஆண்டிபட்டி, காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உத்தமபாளையத்தில் செயல்படும் ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், சின்னமனூா் வெற்றிலை பயிரிடுவோா் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கூட்டுறவு கடன் பெற விரும்புவோா் முகாமில் கலந்து கொண்டு தங்களது ஆதாா் அட்டை, ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், தொழில் திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ரூ. 25 ஆயிரம் வரை கடன் பெற கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மற்றொருவரும், ரூ. 50 ஆயிரம் வரை கடன் பெற 2 பேரும் பிணை (ஜாமீன்) கையொப்பமிட வேண்டும். ரூ. ஒரு லட்சத்துக்கும் மேல் கடன் பெற கடன் தொகைக்கு இரு மடங்கு சொத்து அடமான ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும்.
கல்விக் கடன் பெற பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ்(ஆா்ய்ஹச்ண்க்ங் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்), கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.