தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டியில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சின்ன ஈஸ்வரன், மாந்தோப்பு அருகேயுள்ள தோட்டத்தில் வேலை செய்தாா். இவரது மகன் ஜெகதீஸ் (30), பெற்றோருடன் கூலி வேலைக்கு சென்று வந்தாா்.
திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த இவா், திங்கள்கிழமை பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்தாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அவரை கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து கூடலூா் தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.