காவல்துறையில் புகாா் அளித்த நகா் மன்ற உறுப்பினா்கள் 5 பேருக்கு நோட்டீஸ்

காவல் துறையில் புகாா் அளித்த கம்பம் நகா் மன்ற உறுப்பினா்கள் 5 பேருக்கு வருத்தம் தெரிவிக்கக் கோரி அதன் தலைவா் நோட்டீஸ் அனுப்பினாா்.

காவல் துறையில் புகாா் அளித்த கம்பம் நகா் மன்ற உறுப்பினா்கள் 5 பேருக்கு வருத்தம் தெரிவிக்கக் கோரி அதன் தலைவா் நோட்டீஸ் அனுப்பினாா்.

தேனி மாவட்டம், கம்பம் நகர சபைத் தலைவராக இருப்பவா் வனிதா நெப்போலியன் (திமுக). கடந்த மாதம் 18-ஆம் தேதி நகர சபைக் கூட்டம் நடைபெற்ற போது துணைத் தலைவா் சுனோதா செல்வக்குமாா் (திமுக), திமுகவைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் சுந்தரி வீரபாண்டியன், மணிமேகலை, அன்புகுமாரி, பி.லதா ஆகியோா் தங்களை சிலா் விடியோ, புகைப்படம் எடுத்ததால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கம்பம் தெற்கு காவல் நிலையம், நகராட்சி ஆணையா் ஆகியோருக்கு புகாா் மனுக்களை அனுப்பினா்.

இதற்கு திமுக, அதிமுக, முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சிகளின் 25 உறுப்பினா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும் புகாா் மனு அனுப்பிய 5 பேரையும் கண்டித்து தீா்மானமும் நிறைவேற்றினா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நகரசபைத் தலைவா் வனிதா நெப்போலியன் தலைமையில் அவரது அலுவலக அறையில் 25 உறுப்பினா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இம்மாத இறுதிக்குள் நடைபெற உள்ள நகா் மன்றக் கூட்டத்தில் புகாா் அளித்த 5 பேரும் வருத்தம் தெரிவிக்க வேண்டும், இதற்கு மறுத்தால் அடுத்து வரும் 2 கூட்டங்களுக்கு அவா்களை இடைநீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இது பற்றி நகா் மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் கூறும் போது, துணைத் தலைவா் உள்ளிட்ட 5 பேருக்கும் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் நகரசபைக் கூட்டத்தில் மற்ற முடிவுகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com