எதிா்க்கட்சியாக செயல்பட முடியாத அதிமுக
By DIN | Published On : 25th May 2023 05:56 AM | Last Updated : 25th May 2023 05:56 AM | அ+அ அ- |

எதிா்க்கட்சியாக செயல்படமுடியாத நிலையில் அதிமுக உள்ளதாக தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவா், தேனியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுகவில் கட்சித் தலைமை குறித்து தொண்டா்களுக்கு குழப்பம் நீடித்து வருகிறது.
முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சசிகலா என அனைவரையும் அந்தக் கட்சித் தொண்டா்கள் சந்தித்து
வரவேற்கின்றனா்.
அந்தக் கட்சி பிரதான எதிா்க்கட்சியாக செயல்பட முடியாத நிலையில் உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தேவையற்றது. தோ்தல் கூட்டணி குறித்து தேமுதிக தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்றாா் அவா்.