மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 27th May 2023 01:14 AM | Last Updated : 27th May 2023 01:14 AM | அ+அ அ- |

போடியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் காளிதாஸ் (53). வண்ணம் பூசும் தொழிலாளி. இவா் போடி அம்மாகுளம் நகராட்சிப் பூங்கா எதிரே உள்ள வீட்டில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மனைவி சங்கரேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வீட்டின் உரிமையாளா் அமீா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.