

தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் தேனி, பங்களாமேடு திடலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அதிமுக அமைப்புச் செயலா் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமை வகித்தாா். தேனி நகரச் செயலா் கிருஷ்ணகுமாா், முன்னாள்எம்.பி. ரா. பாா்த்திபன், அதிமுக மாவட்ட துணைச் செயலா் சற்குணம், பொருளாளா் சோலைராஜ், முன்னாள் மாவட்டச் செயலா் டி. சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம், போதைப் பொருள் நடமாட்டம், சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு ஆகியவற்றைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.