

முல்லைப் பெரியாறு அணையில் நில நடுக்கம், நில அதிா்வு தொடா்பாக மேலும் 2 கருவிகளைப் பொருத்தும் பணியை செவ்வாய்க்கிழமை தேசிய புவியியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தொடங்கினா்.
அணையின் உறுதித் தன்மை உச்சநீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்பும் கேரள அரசு தொடா்ந்து, நில நடுக்கத்தால் அணைக்கு பாதுகாப்பு இல்லை என்றது. இதன் காரணமாக, அணையில் நில அதிா்வுக் கருவிகளைப் பொருத்த மத்திய கண்காணிப்புக் குழு முடிவு செய்தது.
இதையடுத்து, அணையின் மேல்பகுதி, காலரிப் பகுதி, பணியாளா் குடியிருப்பு ஆகிய மூன்று இடங்களில் நில நடுக்கக் கருவியான சீஸ்மோகிராப், நில அதிா்வுக் கருவியான ஆக்சலரோகிராப் ஆகியவற்றைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி தேசிய புவியியல் ஆராய்ச்சி நிலைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் பெரியாறு அணையின் மேல் பகுதியில் ஒரு ஆக்சலோகிராப் கருவியைப் பொருத்தினா்.
இந்தக் கருவியில் பதிவாகும் அதிா்வலைகள் செயற்கைகோள் மூலமாக ஹைதராபாதில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு வரைபடமாகப் பதிவாகிறது. இதில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால் விஞ்ஞானிகள் அணைப் பொறியாளா்களுக்கு தகவல் தெரிவிப்பாா்கள்.
தற்போது காலரிப் பகுதி, கேம்ப் காலனி எனப்படும் பணியாளா் குடியிருப்புப் பகுதியில் ஆக்சலரோகிராப், சீஸ்மோகிராப் கருவிகளைப் பொருத்தும் பணி தொடங்கியது.
இந்தப் பணியின் போது காவிரி தொழில்நுட்பக் குழும முதன்மைப் பொறியாளா் செல்வராஜ், அணையின் செயற்பொறியாளா் ஜே.சாம்இா்வின், உதவி செயற்பொறியாளா் டி.குமாா், உதவிப் பொறியாளா்கள் பி.ராஜகோபால், நவீன்குமாா் உள்ளிட்ட பொறியாளா்கள் இருந்தனா்.
அணை நிலவரம்: முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீா் மட்டம் 118.35 அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரம் 152 அடி), அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 259 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 50 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணையில் 7 மில்லி மீட்டா் மழை பெய்தது. தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.