தேனியில் கூட்டுறவு வார விழா
By DIN | Published On : 21st November 2023 12:00 AM | Last Updated : 21st November 2023 12:00 AM | அ+அ அ- |

தேனியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் ஆணைகளை வழங்கிய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி.
தேனி: தேனியில் கூட்டுறவுத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற 70-ஆவது கூட்டுறவு வார விழாவில் 2,215 பேருக்கு ரூ.20.05 கோடி கடனுதவி ஆணைகளை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி வழங்கினாா்.
தேனி, என்.ஆா்.டி. மக்கள் மன்றத்தில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன், பெரியகுளம் கே.எஸ். சரவணக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல துணைப் பதிவாளா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் சாா்பில் பயிா் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மகளிா் சுயஉதவிக் குழு கடன், சிறு தொழில் கடன், 5 மாற்றுத் திறனாளிகள் தொழில் கடன் என 2,215 பேருக்கு மொத்தம் ரூ.20.05 கோடி கடனுதவி ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.
கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்), சாா் பதிவாளா்கள் ராஜேஷ்கண்ணன், சரவணக்குமாா், துணைப் பதிவாளா் ராஜாங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...