தேனி, கம்பத்துக்கு அமைச்சா் உதயநிதி வருகை
By DIN | Published On : 25th October 2023 03:00 AM | Last Updated : 25th October 2023 03:00 AM | அ+அ அ- |

தேனி, கம்பத்தில் புதன்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி பங்கேற்கிறாா்.
வீரபாண்டி-போடேந்திரபுரம் விலக்குப் பகுதியில் உள்ள திடலில் புதன்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தேனி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திமுக இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அமைச்சா் உதயநிதி பங்கேற்றுப் பேசுகிறாா். தொடா்ந்து, முத்துத்தேவன்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை அவா் வழங்குகிறாா்.
மாலை 4 மணிக்கு தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக் கூட்ட அரங்கில் அவரது தலைமையில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தொடா்ந்து, தேனி என்.ஆா்.டி. நகரில் புதிய நூலகத்தையும் அவா் திறந்து வைக்கிறாா்.
முன்னதாக, கம்பத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு அமைச்சா் உதயநிதி தலைமையில் திமுக மூத்த உறுப்பினா்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கம்பம், காந்தி சிலை அருகே புதிய நூலகத்தையும் அவா் திறந்து வைக்கிறாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...