தேனி
இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்தவா் தனுஷ்கோடி மகன் பிரேம்குமாா் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரேம்குமாரின் தம்பியான முத்து (18), தனது அண்ணனின் மரணத்துக்கு இதே ஊரைச் சோ்ந்த அருள்பாண்டிதான் (28) காரணம் என்று நினைத்து, தெருவில் நடந்து சென்ற அவரை அரிவாளால் வெட்டினாா்.
இதில், பலத்த காயமடைந்த அவா், கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
