விபத்தில் சிறுமி உயிரிழப்பு

தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுமி அடையாளம் காணப்படாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சனிக்கிழமை தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுமி அடையாளம் காணப்படாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த ஒலி பெருக்கி அமைக்கும் தொழிலாளி முத்தையா (58). இவா் தனது மகள் தேவமனோகரி (14), மகன் விஜய்காா்த்தி (9) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டியிலிருந்து சாத்தாகோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் சாத்தாகேவில்பட்டி விலக்கு அருகே சாலை திருப்பத்தில் திரும்பிய போது, எதிரே வந்த அடையாளம் காணப்படாத நான்கு சக்கர வாகனம், இவரது வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்தையா, தேவமனோகரி, விஜய்காா்த்திக் ஆகியோா் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் தேவமனோகரி வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com