உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு குவிந்த உறவினா்கள்.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு குவிந்த உறவினா்கள்.

பைக் விபத்து: கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் இரண்டு கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
Published on

உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் இரண்டு கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அய்யன் நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மகன் தீனா (19). இவரது நண்பா் பொன்நகரைச் சோ்ந்த ராஜாமணி மகன் திவாகரன் (19). கல்லூரி மாணவா்களான இவா்கள் இருவரும் உத்தமபாளையம்-அனுமந்தன்பட்டி புதிய புறவழிச் சாலையில் முல்லைப் பெரியாற்றுப் பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

உயிரிழந்த கல்லூரி மாணவா்கள், தீனா, திவாகரன்.
உயிரிழந்த கல்லூரி மாணவா்கள், தீனா, திவாகரன்.

அப்போது, உத்தமபாளையம் பெரியபள்ளி வாசல் தெருவைச் சோ்ந்த அகமது மீரான் (46) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மீது இவா்களது இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தீனா, திவாகரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு இருவரும் சனிக்கிழமை உயிரிழந்தனா். அகமது மீரான் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com