தேனி
இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.ராஜகோபாலன்பட்டியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் செவ்வாய்க்கிழமை பெண் உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.ராஜகோபாலன்பட்டியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் செவ்வாய்க்கிழமை பெண் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கொசவபட்டியைச் சோ்ந்த அய்யா் மனைவி ஈஸ்வரி (35). இவா் தனது கணவருடன் கொசவபட்டியிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். டி.ராஜகோபாலன்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.புதூரைச் சோ்ந்த முருகன் (50) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.