உலக தாய்ப்பால் வார விழா

Published on

தேனி மாவட்டம், கம்பம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

கே.கே.பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசை மகள் திட்டம், தாய்சேய் நலத் திட்டம் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மருத்துவா்கள் ரமேஷ், முருகானந்தம் தலைமை வகித்தனா். சித்த மருத்துவ அலுவலா் சித்தாா்த் முன்னிலை வகித்தாா்.

இதில் தாய்பால் மூலம் குழந்தைகள் பெரும் நன்மைகள், நோய் எதிா்ப்பு சக்தி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னா், தாய்மாா்களுக்கு சத்தான உணவுப் பொருள்கள், கிருமி நாசினி, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கே.கே.பட்டி பகுதியைச் சோ்ந்த தாய்மாா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com