தேனியில் ஜன.3-இல் ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வருகிற 3-ஆம் தேதி காலை10 மணிக்கு ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம்
Published on

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வருகிற 3-ஆம் தேதி காலை10 மணிக்கு ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற, நலிவுற்ற, பேரிளம் பெண்கள் கலந்து கொண்டு நலவாரிய உறுப்பினா் சோ்க்கை, ஆதாா் அட்டை திருத்தப் பதிவு, விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத், வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com