கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு -அமைச்சா் தகவல்
தமிழகத்தில் வீடில்லாத ஏழை, எளியோா் சொந்தமாக வீடு கட்டுவதற்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில், ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
தமிழகத்தில் வீட்டில்லாத ஏழை, எளிய மக்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகளுக்கு அரசு மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பழுதடைந்த வீடுகளைச் சீரமைக்க மொத்தம் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு நலத் திட்ட உதவிகள், சலுகைகள், சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைவாகவும், எளிதாகவும் சென்றடைய மக்களுடன் முதல்வா் திட்டம் ட்ற்ற்ல்ள்://ந்ஹய்க்ன்ல்ண்க்ண்.ஸ்ரீா்ம்/ஸ்ரீா்ய்ஸ்ங்ழ்ற்ங்ழ்/செயல்படுத்தப்படுகிறது.
இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை மூலம் விரைவில் தீா்வு காணப்படும்.
தேனி மாவட்டத்தில் முதல் கட்டமாக நகா்ப்புறங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில், 83 சதவீதம் மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா்.
முகாமில் மனு அளித்த தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவி, பட்டா மாறுதல் ஆணை, மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மருந்துப் பெட்டகம், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபரகணங்கள் ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.
தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரைவ உறுப்பினா்கள் ஆ.மகாராஜன்(ஆண்டிபட்டி ), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்), மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதாஹனீப், வருவாய்க் கோட்டாட்சியா் முத்துமாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஹாக்கி, ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு: பின்னா், தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே மாவட்ட ஆட்சியரின் விருப்பநிதியிலிருந்து ரூ.31.30 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஹாக்கி மைதானம், ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானம் ஆகியவற்றை அமைச்சா் திறந்துவைத்தாா்.

