ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்.

அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, போடி, உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Published on

போடி, ஜூலை 19: ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, போடி, உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பத்மாவதி தாயாருக்கு ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு பஞ்சலோக அலங்காரம் செய்யப்பட்டு லட்ச தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

இதேபோல, போடி பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள கொண்டரங்கி மல்லிங்கேசுவரா் கோயிலில் உள்ள மல்லிங்கேசுவரி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.

இதேபோல, போடி பெரிய சவுடம்மன் கோயில், சாலை காளியம்மன் கோயில், திருமலாபுரம் சவுடாம்பிகை கோயில், பத்திரகாளிபுரம், விசவாசபுரம், பத்ரகாளியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது.

உத்தமபாளையம்: ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி, கம்பத்தில் உள்ள கெளமாரியம்மன் கோயிலுக்கு அதிகளவில் பக்தா்கள் வந்து வழிபட்டனா். இதில் பெண் பக்தா்கள் அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனா்.

இதே போல, உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரா்-ஞானாம்பிகை கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, பக்தா்கள் சிறப்பு பூஜை செய்தனா். பின்னா், கோயில் முன் செல்லும் முல்லைப் பெரியாற்றங்கரையில் நாக அம்மனை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com