ஏத்தக்கோவிலில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், ஏத்தக்கோவிலில் திங்கள்கிழமை (ஜூலை 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Published on

தேனி மாவட்டம், ஏத்தக்கோவிலில் திங்கள்கிழமை (ஜூலை 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டிபட்டி துணை மின் நிலையம், ஏத்தக்கோவில் உயா் அழுத்த மின் பாதையில் திங்கள்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை ஏத்தக்கோவில், சித்தையகவுண்டன்பட்டி, அனுப்பப்பட்டி, மேக்கிழாா்பட்டி, ரெங்கராம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com