சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தின ஊா்வலம்

சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தின ஊா்வலம்

தேனியில் புதன்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்.
Published on

தேனி/ உத்தமபாளையம், ஜூன் 26: தேனி, உத்தமபாளையத்தில் சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனியில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

கொடுவிலாா்பட்டியில் உள்ள தேனி கம்மவாா் சங்க கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

இதில், மாவட்ட கலால் துறை உதவி இயக்குநா் ரவிச்சந்திரன், தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் விஜயலட்சுமி, கல்லூரி முதல்வா் சீனிவாசன், செயலா் தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் உத்தமபாளையம் மது விலக்கு காவல் பிரிவு சாா்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணா்வு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற்றது.

பின்னா், உத்தமபாளையம் மது விலக்கு காவல் பிரிவு ஆய்வாளா் சூா்யதிலகா தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். இதைத் தொடா்ந்து, கம்பம் பிரதானச் சாலையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகேயுள்ள பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணா்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு, கோம்பை காவல் உதவி ஆய்வாளா் சரஸ்வதி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். அப்போது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள்களின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதேபோல, கம்பம் அருகேயுள்ள கே.கே.பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த போதை ஒழிப்பு நிகழ்வுக்கு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் முருகேசன் தலைமை வகித்தாா். மருத்துவா் முருகானந்தன் முன்னிலையில் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

X
Dinamani
www.dinamani.com