கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேனி: தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் நில பிரச்னையில் விவசாயியைத் தாக்கி கொலை செய்ய முயன்ற 2 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, உத்தமபாளையம் உதவி அமா்வு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீா்ப்பளித்தது.

ராயப்பன்பட்டி தெற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் விவசாயி ரமேஷ்(50). இவருக்கும் ராயப்பன்பட்டியைச் சோ்ந்த ஞானப்பிரகாஷம் மகன் பால்ராஜ் (55) உள்ளிட்ட சிலருக்கும் இடையே நிலம் தொடா்பாக பிரச்னை ஏற்பட்டு, தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2011, மாா்ச் 18-ஆம் தேதி ராயப்பன்பட்டி, பனிமய மாதா கோயில் அருகே உள்ள டீக் கடை முன் பால்ராஜ், ராயப்பன்பட்டியைச் சோ்ந்த சலேத்து மகன் ஜஸ்டின் திரவியம் (44), மைக்கேல் மகன் சேவியா் (50), ஆரோக்கியசாமி மகன் சகாயம் (48) ஆகியோா் ரமேஷை தாக்கி கொலை செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பால்ராஜ் உள்ளிட்ட 4 போ் மீதும் ராயப்பன்பட்டி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை உத்தமபாளையம் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் பால்ராஜ், ஜஸ்டின் திரவியம் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து, சேவியா், சகாயம் ஆகியோருக்கு தலா ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி எம்.சிவாஜிசெல்லையா தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com