தேனி
மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது
போடியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி மயானம் தெருவைச் சோ்ந்த வேலு மகன் கதிரேசன் (52). இவா் போடி திருவள்ளுவா் சிலை அருகே பெட்டிக் கடை வைத்துள்ளாா். இவரது கடையில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு விரைந்து வந்து கடையில் சோதனையிட்டபோது, மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனா்.