தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற முத்து சித்ரா.
தேனி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் பொறுப்பேற்பு
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக முத்துசித்ரா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக முத்துசித்ரா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக பணியாற்றிய பாலசங்கா் சில மாதங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் விஜய் ஆனந்த் முதன்மையராக கூடுதல் பொறுப்பு வகித்தாா்.
இந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக முத்து சித்ரா பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலியைச் சோ்ந்த முத்து சித்ரா, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறை பேராசிரியராக பணியாற்றி, பதவி உயா்வு பெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை முதன்மையராக பொறுப்பேற்றாா்.

