மாற்றுத் திறனாளிகள் தின விழா

Updated on

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகுமாா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அரசுத் திட்டத்தின் கீழ் 43 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6.32 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவி, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு

நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 66 பேருக்கு பரிசுப் பொருள்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 31 மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com