தேனி
கிறிஸ்தவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தேனியில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சாா்பில் கிறிஸ்தவா்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில முதன்மைச் செயலா் ரூபன் சரவணக்குமாா் தலைமை வகித்தாா். இதில், தோ்தல் ஆணையம் வாக்காளா் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை கைவிட வேண்டும். அரசு கிறிஸ்தவா்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியாா் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கூடாது. பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின கிறிஸ்தவா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

