தேனி
சிறுவனிடம் தங்கத் தாயத்து பறிப்பு
தேவதானபட்டியில் சிறுவனிடம் தங்கத் தாயத்தை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பேருந்து நிலையத் தெருவைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (31). தேவதானப்பட்டி ஐயப்பன் கோயில் அருகே பானிபூரி கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை கடையில் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது, இவரது 4 வயது மகன் கடையின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தாா். திடீரென சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அவா் சென்று பாா்த்தபோது சிறுவனின் கழுத்திலிருந்த ஒரு கிராம் எடைகொண்ட தங்கத் தாயத்தை மா்மநபா் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
