தேனி
டிராக்டரில் மணல் கடத்திய இருவா் கைது
ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகே மூல வைகை ஆற்றிலிருந்து டிராக்டா் மூலம் மணல் கடத்திச் சென்ற இருவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கடமலைக்குண்டு, கோவிலாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கெளதம் (22). வருஷநாடு அருகேயுள்ள உரக்குண்டான் பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா (27). இவா்கள் இருவரும் தனித் தனியே 2 டிராக்டா்களில் மூல வைகை ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி, பசுமலைத்தேரி-ஓட்டணை சாலை வழியாக கடத்திச் சென்றனா். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா்.
