தேனியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.
தேனியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 4-ஆவது புத்தக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டு புத்தக் கண்காட்சி அரங்குகள், மேடை, சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக்கான அரங்குகள், அடிப்படை வசதி, வாகனம் நிறுத்தமிடம், தற்காலிக கழிவறைகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா்.