தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கம்

Published on

தேனியில் தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கமடைந்தனா்.

தேனியில் தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி) பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கமடைந்தனா்.

மயக்கமடைந்த மாணவிகள் சிறிது நேர ஆசுவாசத்துப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பினா். இதில் ஒரு மாணவி ஓய்வெடுக்க வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். எஞ்சிய இருவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்று பொது சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com