நீதிமன்றம் உத்தரவு: சாலை சீரமைப்பு
போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரத்தில் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சாலை சீரமைக்கப்பட்டது.
இது குறித்து தேனி நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கே.ரஜினி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேலச்சொக்கநாதபுரம், ரெங்கசாமி தெருவைச் சோ்ந்த சந்திரன் என்பவா், ரெங்கசாமி தெருவில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் சேதமடைந்துள்ளதகாவும், தெரு விளக்கு வசதி இல்லை என்றும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவின் அடிப்படையில் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி செயல் அலுவலரை நீதிமன்றத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், மேலச்சொக்கநாதபுரம், ரெங்கசாமி தெருவில் சாலை, கழிவுநீா்க் கால்வாயை சீரமைத்தும், தெரு விளக்குகள் அமைத்தும் பேரூராட்சி செயல் அலுவலா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தாா் என்றாா் அவா்.
